பாண் - சிற்றுண்டிகளின் விலைகளை குறைப்பதற்கான அறிவுறுத்தல்!

By Fathima Jun 19, 2023 12:08 PM GMT
Fathima

Fathima

பாண் மற்றும் சிற்றுண்டிகளின் விலைகளைக் குறைப்பதற்கான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அதன்படி பாண் மற்றும் சிற்றுண்டிகளின் விலைகளை 10 ரூபாவால் குறைப்பதற்கான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம் (19.06.2023) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பாண் - சிற்றுண்டிகளின் விலைகளை குறைப்பதற்கான அறிவுறுத்தல்! | Bread And Snacks Are Priced At Rs 10

கோதுமை மாவின் விலை

மேலும், கோதுமை மாவின் விலை நிலைமை தொடர்பில் அவர் கூறுகையில், கோதுமை மாவின் விலை 430 ரூபாவாக காணப்பட்டது. தற்போது சந்தையில் 170, 160 ரூபாவாக காணப்படுகின்றது.

தட்டுப்பாடுகள், விலை அதிகரிப்பைத் தவிர்ப்பதற்காகவே கோதுமை மாவை அத்தியாவசிய பொருளாக அறிவித்துள்ளோம்.

எதிர்காலத்தில் கோதுமை மாவின் விலை ஒருபோதும் அதிகரிக்கப்படாது என்ற உத்தரவின் காரணமாகவே பேக்கரி பொருட்களின் விலைகளைக் குறைக்கலாம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.