பட்டம் பறக்க விட சென்ற சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்!
Kiran Rathod
Colombo
Kids
By Fathima
மாத்தறை வெஹரகம்பிட்ட பிரதேசத்தில் பட்டம் பறக்க விடுவதில் ஏற்பட்ட முரண்பாட்டின்போது சிறுவன் ஒருவரின் கை துண்டிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவத்தின்போது சிறுவனின் கை, மணிக்கட்டில் இரண்டாக துண்டிக்கப்பட்டுள்ளது.
உடனடியாகவே ஐஸ் கட்டிகளில் துண்டிக்கப்பட்ட சிறுவனின் கைத்துண்டை வைத்த உறவினர்கள், சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பின்னர் சிகிச்சைகளுக்காக சிறுவன் உடனடியாக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் மாத்தறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.