காதலியைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்த காதலன்

Sri Lanka Police Crime Branch Criminal Investigation Department Crime
By Madheeha_Naz Jan 08, 2024 06:30 AM GMT
Madheeha_Naz

Madheeha_Naz

தன் காதலியுடன் ஏற்பட்ட முரண்பாட்டில் காதலன் காதலியைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துள்ளார்.

இந்தச் சம்பவம் பிலியந்தலை பிரதேசத்தில் இன்று (07.01.2024) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் 24 வயதுடைய இளைஞர் கொலைக்குப் பயன்படுத்திய கத்தியுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரின் வாக்குமூலம்

ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்த 26 வயதான ஜே.எம். ஆயிஷா லக்மினி என்ற யுவதியே கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காதலியைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்த காதலன் | Boyfriend Murder His Girlfriend

கொல்லப்பட்ட யுவதி தனது தாய், தந்தை மற்றும் சகோதரருடன் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் பிலியந்தலை பிரதேசத்தில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரான காதலனுடன் கொல்லப்பட்ட யுவதி சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னர் காதல் உறவில் இருந்த நிலையில், சுமார் மூன்று மாதங்களாகத் தனது காதலனைத் தவிர்த்து வந்துள்ளார் என்று சந்தேகநபரின் வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளது என்று பிலியந்தலை பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.