யாழ். சாவகச்சேரியில் 27 வயது இளைஞன் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 27 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் நீண்ட காலமாக உயிர்க்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையாக இருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் போதைப்பொருள் பாவித்த நிலையில் காணப்பட்ட இளைஞனை உறவினர்கள் சிகிச்சைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
உடற்கூற்று பரிசோதனையின் போது இளைஞன் ஹெரோயினுக்கு அடிமையானவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அத்துடன் நேற்றைய தினம் குறித்த இளைஞனுடன் போதைப்பொருளை நுகர்ந்த ஏனைய இளைஞர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பின்னர், மீண்டும் போதைக்கு அடிமையாகி உள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.