பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல்! பொய்யான தகவலை வழங்கியவர் கைது
Sri Lanka Bomb Blast
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Fathima
அக்குறணை பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்படவிருப்பதாக பொய்யான தகவலை வழங்கிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இன்று காலை மேற்கொண்ட நடவடிக்கையின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்
.
கண்டி – ஹரிஸ்பத்துவ பிரதேசத்தில் வைத்து இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.