பாலமுனையில் கடலில் தவறி விழுந்து காணாமல்போன கடற்றொழிலாளி சடலமாக மீட்பு
மட்டக்களப்பு(Batticaloa) - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாலமுனை நடுத்துறை கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது தவறி விழுந்து காணாமல்போன கடற்றொழிலாளி ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை (15) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பாலமுனையைச் சேர்ந்த 59 வயதுடைய கடற்றொழிலாளியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தேடும் பணிகள்
கடந்த திங்கட்கிழமை (14) இரவு கடலுக்கு மீன்படிக்கச் சென்றுள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை (15) அதிகாலை 3.00 மணியளவில் மீன்பிடித்து விட்டு படகின் ஒரு பகுதியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்துள்ளார்.
இந்நிலையில் துக்க கலக்கத்தில் கடலில் தவறி விழுந்து காணாமல்போயுள்ளார் என தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காணாமல்போன அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும், இது தொடர்பான மேலதிக விவாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


