மட்டக்களப்பில் பிறந்த குழந்தையை காட்டில் வீசிய பெண்ணின் மோசமான செயல்

Batticaloa Sri Lankan Peoples Crime
By Rakshana MA Mar 15, 2025 10:05 AM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பு  சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மொறக்கொட்டான்சேனை காட்டை அண்டிய பகுதியில் வீசி எறியப்பட்ட நிலையில் ஆண் குழந்தையொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று(15) அதிகாலை குறித்த குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் ஈராக்கில் படுகொலை : உறுதி செய்த டிரம்ப்

ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் ஈராக்கில் படுகொலை : உறுதி செய்த டிரம்ப்

பெண்ணின் மோசமான செயல்

இன்று காலை 9.00 மணியளவில் சடலம் ஒன்று இருப்பதை கண்டு பொதுமக்கள் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பில் பிறந்த குழந்தையை காட்டில் வீசிய பெண்ணின் மோசமான செயல் | Body Of Baby Boy Found Dumped In Forest Batticaloa

இதன்படி, ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்த பெண் ஒருவர் அந்த குழந்தையை உரப்பையில் கட்டிக் கொண்டு சென்று அதனை சந்திவெளி பொலிஸ் நிலையத்தில் இருந்து சுமார் 3 கிலோமீற்றர் தூரம் கொண்ட மொறக்கொட்டான்சேனை காட்டையண்டிய பகுதியில் வீசிவிட்டு சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது.

அம்பாறையில் பழுதடைந்த பழங்களை விற்பனை செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

அம்பாறையில் பழுதடைந்த பழங்களை விற்பனை செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

தேடும் பணி

மேலும், குழந்தை சம்பவதினமான இன்று பிறந்துள்ளதாகவும் குழந்தையை பெற்றெடுத்து வீசிய பெண்ணை தேடும் பணியில் பொலிஸார் தீவிரமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பில் பிறந்த குழந்தையை காட்டில் வீசிய பெண்ணின் மோசமான செயல் | Body Of Baby Boy Found Dumped In Forest Batticaloa

இதனையடுத்து நீதிமன்ற உத்தரவை பெற்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை மாணவர்களிடையே அதிகரிக்கும் மோசமான செயல்

பாடசாலை மாணவர்களிடையே அதிகரிக்கும் மோசமான செயல்

சம்மாந்துறையில் விசர் நாய்கடித்து 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி

சம்மாந்துறையில் விசர் நாய்கடித்து 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW