பாலமுனையில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட உடல்
பாலமுனை - முள்ளிமலை பகுதியில் தூக்கில் தொங்கிய மற்றும் அழுகிய நிலையில் நேற்று (06) சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சடலத்தை உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை - முள்ளிமலையடி பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் ஆணின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது.
காணாமல் போன நபர்...
சம்பவம் நடந்த இடத்திற்கு அம்பாறை தடயவியல் பொலிஸ் அதிகாரிகள் வருகை தந்து தடயவியல் ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது கடந்த சில நாட்களுக்கு முன்பு அக்கரைப்பற்று அலிக்கம்பை பகுதியில் ஏரப்பன் ராமன் (69 வயது) என்பவர் காணாமல் போயுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில் மரணமடைந்துள்ளவர், காணாமல் போன தங்கள் உறவினர் என சம்பவ இடத்திற்கு சென்றவர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.
இம்மரணம் குறித்து அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

