இடிபாடுகளுக்கு அடியில் இருந்து எட்டு உடல்கள் மீட்பு! காசாவில் தொடரும் சோகம்
மத்திய காசாவில் இடிந்து விழுந்த வீட்டின் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து எட்டு உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உடல்கள் மீட்பு
மத்திய காசாவில் உள்ள மகாசி முகாமில் உள்ள அவர்களது வீட்டின் இடிபாடுகளில் இருந்து பலஸ்தீனிய குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக வஃபா செய்தி நிறுவனம் (Wafa news agency) தெரிவித்துள்ளது.

காசா சிவில் பாதுகாப்பு குழுக்கள், காவல்துறை மற்றும் செஞ்சிலுவை சங்க ஊழியர்களுடன் இணைந்து, இடிபாடுகளுக்கு அடியில் இன்னும் காணாமல் போன பாலஸ்தீனியர்களின் உடல்களை மீட்க முகாமில் பணியாற்றி வருகின்றன.
சமீபத்திய மீட்புகளுடன், போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து மீட்கப்பட்ட பலஸ்தீனியர்களின் உடல்களின் எண்ணிக்கை 582 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.