சாரதி அனுமதிப்பத்திரத்தை கருப்புப் பட்டியலில் இடும் முறை! முதற்கட்ட மதிப்பீடு ஆரம்பம்
எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் சாரதி அனுமதிப்பத்திரத்தை கருப்புப் பட்டியலில் இடும் முறையொன்று நடைமுறைப்படுத்தப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த தெரிவித்துள்ளார்.
அத்தோடு, கருப்புப் பட்டியலில் இடுவதற்கான முதற்கட்ட மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (25) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தண்டப்பத்திரம்
இந்த நடைமுறை மூலம் நெடுஞ்சாலைகளில் வீதி ஒழுங்கு விதிகளை மீறுவோருக்கு எதிராக பொலிஸாரினால் தண்டப்பத்திரம் வழங்கப்படும் எனவும் நிஷாந்த அனுருத்த குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அனைத்து சாரதிகளுக்கும் அவர்களது தவறுகளுக்கமைய கருப்புப் பட்டியலில் இடுவதற்கான புள்ளிகள் சேர்க்கப்படும் என்றும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |