வானங்கள் பூமிகளை விட கனமுடைய திக்ரு

World
By Fathima Jun 17, 2025 05:11 AM GMT

ரஸூலே அக்ரம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியதாக ஹஜ்ரத் அபூஸயீதுல் குத்ரீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நபிமூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹு த ஆலாவிடம் யா அல்லாஹ்! நான் உன்னை திக்ரு செய்து உன்னை அழைக்கும்படியான ஒரு துஆவை நீ எனக்கு கற்றுத்தருவாயாக என வேண்டிய போது, லாஇலாஹ இல்லல்லாஹ் என்று நீர் கூறிவருவீராக என்று அல்லாஹ் பதிலளித்தான்.

தினந்தோறும் குர்ஆனை ஓதி வாருங்கள்

தினந்தோறும் குர்ஆனை ஓதி வாருங்கள்

கனமான திக்ரு

யா அல்லாஹ் உன்னுடைய அடியார்கள் அனைவரும் இந்த கலிமாவை தானே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்று மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறியதும், லா இலாஹ இல்லல்லாஹ் ஓதி வருவீராக என்று மீண்டும் கூறினான்.

மறுபடியும் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள், யா அல்லாஹ் எனக்கு மட்டும் பிரத்தியேகமான ஒரு விஷயத்தை வழங்க வேண்டுமென நான் விரும்புகிறேன் என்று கேட்டார்கள்.

அப்போது அல்லாஹ் மூஸாவே ஏழு வானங்களையும் ஏழு பூமிகளையும் தராசின் ஒரு தட்டிலும், இந்த லாஇலாஹ இல்லல்லாஹ்வை மற்றொரு தட்டிலும் வைத்தால் லா இலாஹ இல்லல்லாஹ் உடைய தட்டு தான் கனத்தால் கீழே தாழ்ந்து விடும் என்று அருளினான்.

உலகையே ஆச்சரியப்படுத்த தயாராகும் ஈரான் : வெளியான காணொளி

உலகையே ஆச்சரியப்படுத்த தயாராகும் ஈரான் : வெளியான காணொளி

ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் தெரிவு குறித்து வெளியான தகவல்

ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் தெரிவு குறித்து வெளியான தகவல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW