ஐவர் படுகொலையின் பிரதான சந்தேகநபரான பெண் கைது
அண்மையில் பெலியத்த பகுதியில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அபே ஜனபலவேகய கட்சியின் தலைவர் சமன் பெரேரா உள்ளிட்ட ஐந்து பேர் அண்மையில் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கடற்படையிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்ட படைவீரர் ஒருவரின் மனைவி மற்றும் அவரது தந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட அதிரடிப்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தின் பிரதான துப்பாக்கிதாரியாக செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட கடற்படை சிப்பாயின் மனைவி மற்றும் மனைவியின் தந்தை ஆகியோர் பல்லேவல பிரசேத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரதான துப்பாக்கிதாரி உள்ளிட்ட சிலர் டுபாய் தப்பியோட்டம்
72 வயதான தந்தையிடமிருந்து 21 கிராம் மற்றும் 350 மில்லி கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருளும் மீட்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பிரதான துப்பாக்கிதாரி மற்றும் இரண்டு துப்பாக்கிதாரிகள் டுபாய்க்கு தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.