நோன்பு காலத்தில் கல்முனை மாநகர சபை எல்லையில் வாழும் மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

Kalmunai Iftar
By Thahir Apr 03, 2023 10:42 PM GMT

கல்முனை மாநகர சபை எல்லையினுள் புனித ரமழான் நோன்பு காலத்தை முன்னிட்டு, மாட்டிறைச்சியை கட்டுப்பாட்டு விலையில் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் திங்கட்கிழமை (03) பிற்பகல் இறைச்சிக் கடை உரிமையாளர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின்போது அவர்களது இணக்கப்பாட்டுடன் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று 04ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தொடக்கம் ஒரு கிலோ கிராம் தனி இறைச்சியை 2000 ரூபாவுக்கும் 200 கிராம் முள் சேர்க்கப்பட்ட ஒரு கிலோ கிராம் இறைச்சியை 1800 ரூபாவுக்கும் விற்பனை செய்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நோன்பு காலத்தில் கல்முனை மாநகர சபை எல்லையில் வாழும் மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல் | Beef In Kalmunai

இக்கலந்துரையாடலில் பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம், கணக்காளர் கே.எம்.றியாஸ், பொறியியலாளர் ஏ.ஜே.ஹலீம் ஜௌஸி, கால்நடை வைத்திய அதிகாரி என்.ஏ.வட்டபொல, வருமான வரி பரிசோதகர்களான ஏ.ஜே.சமீம், எம்.சலீம், எம்.எஸ்.எம்.உபைத், எம்.ரி.சப்னம் சாஜிதா மற்றும் எல்.எம்.சாதிக் உள்ளிட்ட உத்தியோகத்தர்களும் பங்கேற்றிருந்தனர்.