மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள் போராட்டம்
மட்டக்களப்பில் வீதி அதிகார சபையில் தற்காலிகமாக கடமையாற்றி வரும் ஊழியர்களை நிரந்தரமாக்க கோரி ஜக்கிய பொது சேவையாளர் சங்கத்தினர் போராட்ட ஊர்வலத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று செவ்வாய்க்கிழமை (20) பொலிஸ் நிலைய வீதி சுற்றுவடத்தில் இருந்து காந்தி பூங்கா வரை இந்த போராட்ட ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வீதி அதிகார சபையில் தற்காலிகமாக இணைக்கப்பட்ட 141 ஊழியர்கள் கடந்த 9 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி வந்திருந்த போதும் அவர்களை இதுவரை நிரந்தரமாக்கப்படவில்லை.
கோரிக்கைகள்
எனவே அவர்களை நிரந்தரமாக்குமாறு கோரி ஜக்கிய பொது சேவையாளர் சங்கத்தின் மட்டக்களப்பு தலைவர் சுரேஸ் தலைமையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நகரிலுள்ள பொலிஸ் நிலைய வீதிச் சுற்றுவட்டத்துக்கு அருகில் ஒன்று கூடிய வீதி அதிகார சபையில் தற்காலிகமாக கடமையாற்றி வரும் ஊழியர்கள் பகல் 12.00 மணிக்கு ஒன்று திரண்டு அனைத்து தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்கு, 14 நாள் மருத்துவ லீவு வழங்கு, ஏனைய ஊழியர்களுக்கு வழங்கும் சலுகைகளை வழங்கு, ஜனாதிபதியே எங்களை நிரந்தரமாக்கு போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, இந்த போராட்டம் 1.00 மணிவரை இடம்பெற்ற பின்னர் போரட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


