மட்டக்களப்பு மாநகர சபையால் துப்பரவு பணிகள் முன்னெடுப்பு

Batticaloa Eastern Province National Health Service
By Fathima Aug 26, 2023 02:59 PM GMT

மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் காணப்படும் பொது மயானங்களை துப்பரவு செய்யும் பணிகளை மட்டக்களப்பு மாநகர சபை முன்னெடுத்துள்ளது. 

குறித்த பணிகள் இன்று (26.08.2023) காலை மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் எந்திரி என்.சிவலிங்கம் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

தேசிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளின் ஓர் அங்கமாகவும் முன்னெடுக்கப்பட்ட இச் சிரமதானப் பணிகளில் மாநகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் த.டமராஜ் உள்ளிட்ட சுகாதார பகுதி உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். 

இச் சிரமதானப் பணிகளின் போது பொதுமக்கள் தமது இறுதி சடங்குகளை அசௌகரியங்கள் இன்றி முன்னெடுப்பதற்கு ஏதுவாக அங்கு அமைக்கப்பட்டுள்ள உள்ளக பாதைகளும் சீரமைக்கப்பட்டதுடன், இரவு வேளைகளில் அப் பகுதியில் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் LED மின் குமிழ்களும் இதன்போது பொருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.