பெட்டிகலோ கெம்பஸ் இராணுவத்தினரால் விடுவிப்பு: பொறுப்பேற்ற ஹிஸ்புல்லாஹ் (Photos)

Sri Lanka Army Batticaloa Ranil Wickremesinghe
By Fathima Sep 20, 2023 06:56 AM GMT

மட்டக்களப்பு மாவட்டம் ஜெயந்தியாயவில் அமைந்துள்ள “பெட்டிகலோ கெம்பஸ்” விடுவிப்பு செய்யப்பட்டுள்ளது.

பல வருடங்களாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த பல்கலைக்கழத்திலிருந்து இராணுவத்தினர் இன்று (20.09.2023) வெளியேறியுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை (19.09.2023) முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்விடம் கெம்பஸை பொறுப்பேற்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

பெட்டிகலோ கெம்பஸ் இராணுவத்தினரால் விடுவிப்பு: பொறுப்பேற்ற ஹிஸ்புல்லாஹ் (Photos) | Batticaloa Campus Handover

ஹிஸ்புல்லாஹ் நேரடியாக விஜயம்

அதற்கமைய முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று நேரடியாக கெம்பஸுக்கு விஜயம் செய்து கெம்பஸை பொறுப்பேற்றுக் கொண்டார்.

கெம்பஸை பொறுப்பேக்கும் நிகழ்வில் கல்குடா அல் கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.எம்.ஹாரூன் ஸஹ்வி, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம். தாஹீர், மௌலவி மும்தாஸ் மதனி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery