இடைநிறுத்தப்பட்ட உயர்தரப் பரீட்சைகள் மீள ஆரம்பம்! மட்டக்களப்பு மாவட்ட நிலவரம்
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் நடைபெற்றது.
கிழக்கு மாகாணத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை இன்று(04) காலை மட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்று கல்வி வலையங்களிலும் உள்ள பரீட்சை நிலையங்களில் மிக அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டது.
உயர்தரப்பரீட்சைகள்
கல்வி அமைச்சினால் மீள் புதுப்பிக்கப்பட்ட நேர அட்டவணைக்கேற்ப பரீட்சைகள் இடம்பெற உள்ளன.
இது தொடர்பில் பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கையில்,
மாவட்டத்தில் நிலவும் சீரான காலநிலைக்கு மத்தியில் மாணவர்கள் உற்சாகமாக பரீட்சை நிலையங்களுக்கு சமூகமளித்ததை காணக் கூடியதாக இருந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 7,221 பாடசாலை பரீட்சார்த்திகளும் 2,361 தனியார் பரீட்சார்த்திகளும் தோற்றவுள்ளதுடன் மாவட்டத்தில் 69 பரீட்சை நிலையங்களும் 8 இணைப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |