கிழக்கு மாகாண கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Batticaloa Fishing Climate Change Eastern Province Sri Lanka Fisherman
By Laksi Dec 18, 2024 06:59 AM GMT
Laksi

Laksi

சீரற்ற காலநிலை மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள கடற்றொழிலாளர்களின் தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, எதுவித வருமானமும் இன்றி தாம் கஷ்டப்படுவதாகவும் நிவாரணங்களை வழங்க உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை மாவட்டத்தில் உள்ள கடற்றொழிலாளர்களின் தோணிகள், வள்ளங்கள் தற்போதும் கடல் பேரலையிலிருந்து காப்பாற்று முகமாக கட்டி வைப்பதை காணக் கூடியதாக உள்ளது.

2028இல் எமது அரசாங்கமே ஆட்சி அமைக்கும்: நாடாளுமன்றில் ஜனாதிபதி அறிவிப்பு

2028இல் எமது அரசாங்கமே ஆட்சி அமைக்கும்: நாடாளுமன்றில் ஜனாதிபதி அறிவிப்பு

கோரிக்கை

கடல் கொந்தளிப்பு காரணமாக கடலை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான கடற்றொழில் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Batti Fishermen Livelihood Affected Sea Turbulence

இந்த நிலையில், கடற்றொழிலாளர்களின் கடற்கரை பகுதிகள் தற்போது வெறுச்சோடி காணப்படுவதை காணக் கூடியதாக உள்ளது.

தற்போதைய நிலையை உரிய அதிகாரிகள் பார்வையிட்டு அரசாங்கம் தங்களது நிலைமைகளை கருத்தில் கொண்டு தமக்குரிய உதவிகளை வழங்குமாறு பாதிக்கப்பட்டுள்ள மாவட்ட கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினராக நிஸாம் காரியப்பர் பதவிப்பிரமாணம்

நாடாளுமன்ற உறுப்பினராக நிஸாம் காரியப்பர் பதவிப்பிரமாணம்

முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகரின் நினைவிடத்திற்கு எம்.பிக்கள் விஜயம்

முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகரின் நினைவிடத்திற்கு எம்.பிக்கள் விஜயம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGallery