அமெரிக்க குடியுரிமையை கைவிட தயாராக இல்லை: பசில் ராஜபக்ச

Basil Rajapaksa United States of America Sri Lanka Podujana Peramuna Sri Lankan political crisis Rajapaksa Family
By Fathima Sep 30, 2023 02:26 PM GMT
Fathima

Fathima

தனது அமெரிக்க குடியுரிமையை கைவிட தயாராக இல்லை என முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்பும் தான் இதே நிலையில் தான் இருந்ததாகவும், இப்போதும் அதே நிலைப்பாட்டில் இருப்பதாகவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

கட்சி வேட்பாளர்

பசில் ராஜபக்ச தனது அமெரிக்க குடியுரிமையை கைவிட்டு இலங்கையின் அரசியலில் நேரடியாக பங்குப்பற்றுவார் என பொதுஜன பெரமுன கட்சியினர் மத்தியில் பேசப்பட்டு வந்தநிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க குடியுரிமையை கைவிட தயாராக இல்லை: பசில் ராஜபக்ச | Basil Rajapaksa And American Citizenshipready

மேலும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் யார் போட்டியிடுவது என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

எனினும், கட்சியாக வேட்பாளரை முன்வைக்க வேண்டும் என்ற கருத்து கட்சிக்குள் வலுவாக வெளிப்பட்டு வருவதாகவும், மற்றபடி வேட்பாளர் யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் பசில் மேலும் தெரிவித்துள்ளார்.