நாளை மதுபானசாலைகளுக்கு பூட்டு

By Dharu Oct 02, 2023 04:23 PM GMT
Dharu

Dharu

நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை (03.10.2023) மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கை மதுவரித் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரான மேலதிக மதுவரி ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளார்.

உலகளாவிய ரீதியில் நாளைய தினம் சர்வதேச மது ஒழிப்பு தினம் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ளது.

ஊடக அறிக்கை 

நாளை மதுபானசாலைகளுக்கு பூட்டு | Bars Will Be Closed Tomorrow

இதனை முன்னிட்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.