நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகளுக்கு பூட்டு

Sri Lanka Excise Department of Sri Lanka General Election 2024
By Laksi Nov 11, 2024 09:28 AM GMT
Laksi

Laksi

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும்  மூடப்படும் என மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, நவம்பர் மாதம் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 15ஆம் திகதி போயா தினமாக இருப்பதால், இவ்விரு நாட்களிலும் பல்பொருள் அங்காடிகள் மூடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்சார கட்டணம் குறைப்பது தொடர்பில் வெளியான தகவல்

மின்சார கட்டணம் குறைப்பது தொடர்பில் வெளியான தகவல்

கடுமையான சட்டம்

அத்துடன், தேர்தல் காரணமாக நாடளாவிய ரீதியில் பல்பொருள் அங்காடிகள் மூடப்படும் தினங்களில் விதிமுறைகளை மீறி சட்டவிரோதமான முறையில் செயற்படும் பல்பொருள் அங்காடிகளுக்கு சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு கலால் ஆணையாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகளுக்கு பூட்டு | Bars Closed Ahead Of General Elections

இதேவேளை, பொதுத்தேர்தலை முன்னிட்டு அனைத்து அரச மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள், நிதி நிறுவன ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்குமாறு தேர்தல் ஆணையகம் (Election Commission) அறிவித்துள்ளது.

தேர்தல் பிரசாரங்கள் தொடர்பில் வெளியான தகவல்

தேர்தல் பிரசாரங்கள் தொடர்பில் வெளியான தகவல்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW