வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Sri Lanka Sri Lankan Peoples Money
By Mayuri Jun 26, 2023 07:14 AM GMT
Mayuri

Mayuri

இலங்கையில் வங்கிகளுக்கு நீண்ட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்றை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க விடுத்துள்ளார்.

அதன்படி வங்கிகளுக்கு நீண்ட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் மக்களுக்கு அத்தியாவசியமான வங்கி செயற்பாடுகளை மேற்கொள்ள தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

வங்கிகளுக்கான விடுமுறை அறிவிப்பின் மூலம், எந்த வகையான வங்கி பரிவர்த்தனைகளும் குறிப்பாக வழக்கமான விடுமுறை நாட்களில் இணையம் மூலம் செய்யப்படும் வங்கி பரிவர்த்தனைகள், ATM மற்றும் Online வங்கி பரிவர்த்தனைகள் என்பவற்றுக்கு எந்தவிதமான தடையும் இல்லை.

சில வங்கிகள் விடுமுறை நாட்களிலும் செயல்படுவதை நாம் அனைவரும் அறிவோம். இது weekend banking என கூறப்படுகிறது.

இவ்வளவு நீண்ட வங்கி விடுமுறை நாட்களிலும், மக்கள் தங்கள் வங்கித் தேவைகளைச் செய்ய அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இலங்கையில் எதிர்வரும் 30ஆம் திகதி சிறப்பு விடுமுறை

இலங்கையில் எதிர்வரும் 30ஆம் திகதி சிறப்பு வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 29ஆம் திகதி ஹஜ் பெருநாள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மத்திய வங்கி ஆளுநரின் அறிவித்தல்

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பை செயற்படுத்துவதற்கான காலம் ஒன்று அவசியமாக உள்ளதனால், எதிர்வரும் 30ஆம் திகதி வங்கிகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்படுவதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம்(25.06.2023) இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

(29.06.2023)ஆம் திகதியன்று ஹஜ் பெருநாள் காரணமாக மூடப்படும் வங்கிகள், எதிர்வரும் (03.07.2023) திகதி வரை மூடப்பவுள்ளன.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பாக மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் குறிப்பிடுகையில், இந்த விடுமுறையில் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பை செயற்படுத்துவதற்கு தயாராகவுள்ளோம்.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தேசிய வங்கி கட்டமைப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என தெரிவித்துள்ளார்.

பங்குச்சந்தைக்கும் விடுமுறை

கொழும்பு பங்குச் சந்தையின் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகள் எதிர்வரும் 30ஆம் திகதி இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பங்குச் சந்தை விடுத்துள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 30ம் திகதி வங்கிகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதனை கருத்திற்கொண்டு, அன்றைய தினம் கொழும்பு பங்குச் சந்தையின் கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.