வட்டி வீத குறைப்பு தொடர்பில் வங்கிகளின் நிலைப்பாடு: நிதி இராஜாங்க அமைச்சர் கூறும் விடயம்
வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்ட போதும் ஒரேயடியாக அதனை குறைக்க முடியாது என வணிக வங்கிகள் கூறுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதாரப் படுகுழி
தொடர்ந்தும் தெரிவிக்கையில், மிக ஆழமான பொருளாதாரப் படுகுழியில் நாடு விழுந்தது. இதனால் நாங்கள் எல்லா பக்கங்களில் இருந்தும் நெருக்கடிகளுக்கு உள்ளானோம்.
இந்த நெருக்கடியில் இருந்து யாரும் வெளியேற முடியாது என்ற நிலை ஏற்பட்ட போதும் இந்த நிலைமையை சீர்செய்ய அரசாங்கம் முடிவு செய்தது.
இதனால் வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டன. ஆனால் ஒரேயடியாக குறைக்க முடியாது என்று வணிக வங்கிகள் கூறுகின்றன.
ஆசிய அபிவிருத்தி வங்கியில் கடன் பெற அனுமதிக்கும் திட்டம்
காரணம் திரட்டப்பட்ட வட்டியை வைப்புத் தொகைக்கு செலுத்த வேண்டும். அது உண்மையும் கூட.
எனவே சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்கள் மூலதனத் தேவைகளை 8 வீதம் அளவில் பூர்த்தி செய்ய ஆசிய அபிவிருத்தி வங்கியில் கடன் பெற அனுமதிக்கும் திட்டம் உள்ளது.
இவற்றை படிடப்படியாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |