குறைக்கப்பட்ட வட்டி வீதங்கள்

Central Bank of Sri Lanka Sri Lanka
By Mayuri Oct 05, 2023 08:34 AM GMT
Mayuri

Mayuri

கொள்கை வட்டி வீதங்களை இலங்கை மத்திய வங்கி குறைத்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை நேற்று (04.10.2023) மாலை கூடியிருந்தது. 

இதன்போது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய துணைநில் வைப்பு வசதி வீதம் 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கான வட்டி வீதம் ஏற்கனவே 11 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

மேலும், துணைநில் கடன் வசதி வீதத்தை இலங்கை மத்திய வங்கி 11 சதவீதமாக குறைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.