வங்கிக் கடன் பெற்றவர்களுக்கு மத்திய வங்கி ஆளுநர் முக்கிய தகவல்

Central Bank of Sri Lanka Sri Lanka Economic Crisis Economy of Sri Lanka
By Fathima Jan 23, 2024 11:44 AM GMT
Fathima

Fathima

வங்கிக் கடன் வட்டி வீதம் மேலும் குறைய வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியில் இன்று (23.1.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், 

தனித்தனியாக வட்டி 

சில வங்கிகள் விளக்கமளிக்க அழைத்தோம். அதன்படி, சில காரணங்களை கூறியுள்ளோம். 

வங்கிக் கடன் பெற்றவர்களுக்கு மத்திய வங்கி ஆளுநர் முக்கிய தகவல் | Bank Interest Rates Sri Lanka Today

வங்கிக் கடன் வட்டி வீதம் மேலும் குறைய வேண்டும். வங்கிக்கடன் பெற்றவர்களின் வட்டி விகிதமும் குறைய வேண்டும்.

ஒவ்வொரு கடனுக்கும் தனித்தனியாக வட்டி விகிதங்களை அறிந்து கொள்வது வங்கியின் முடிவு, எனவே மத்திய வங்கி தலையிடாது.

இந்த நேரத்தில், சந்தை வட்டி விகிதங்களை ஏதாவது ஒரு வழியில் சரிசெய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

வங்கிக் கடன் பெற்றவர்களுக்கு மத்திய வங்கி ஆளுநர் முக்கிய தகவல் | Bank Interest Rates Sri Lanka Today

நாணயக்கொள்கை சபை

இந்நிலையில், வட்டி விகிதங்களை மாற்றியமைக்காமல் தொடர்ந்து பேணுவதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயக்கொள்கை சபை தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, 9% நிலையான வைப்புத்தொகை வசதி வீதத்தையும் நிலையான கடன் வசதி வீதமான 10% வீதத்தையும் தற்போதைய மட்டத்தில் பேணுவதற்கு தீர்மானித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.