மத்திய வங்கி வர்த்தக வங்கிகளுக்கு வழங்கியுள்ள அறிவித்தல்

Central Bank of Sri Lanka Sri Lanka Economy of Sri Lanka
By Fathima Aug 10, 2023 11:00 AM GMT
Fathima

Fathima

இலங்கை மத்திய வங்கியானது நியதி ஒதுக்கு விகிதத்தை குறைப்பதாக அறிவித்துள்ளது. 

அதனடிப்படையில் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளின் அனைத்து ரூபா வைப்பு பெறுப்புக்கள் மீதும் ஏற்புடைய நியதி ஒதுக்கு விகிதத்தினை எதிர்வரும் 16ஆம் திகதி (16.08.2023) அன்று ஆரம்பிக்கின்ற ஒதுக்குப் பேணுகை காலப்பகுதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் 4 சதவீதத்திலிருந்து 2 சதவீதத்திற்கு 200 அடிப்படை புள்ளிகளால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வங்கிகளுக்கான அறிவிப்பு

மத்திய வங்கி வர்த்தக வங்கிகளுக்கு வழங்கியுள்ள அறிவித்தல் | Bank Interest Rates In Sri Lanka

சந்தை கடன் வழங்கல் வீதங்கள் விரைவாக குறைக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு நியதி ஒதுக்கு விகித குறைப்பின் நன்மையை தாமதமின்றி அவற்றின் வாடிக்கையாளர்களுக்கு உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் வழங்கும் என எதிர்பார்ப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் மத்திய வங்கியானது சந்தை அபிவிருத்திகளை தொடர்ந்தும் கண்காணித்து தேவைப்படின் பொருத்தமான நிர்வாக வழிமுறைகளை எடுக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.