வன்முறையில் சிக்கிதவிக்கும் பங்களாதேஷ்: துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள உத்தரவு
பங்களாதேஷில் (Bangladesh) நாடு முழுவதும் இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்களை தடுக்கும் வகையில் வன்முறையில் ஈடுபடுவோர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
வன்முறை கட்டுப்பாட்டுக்குள் வராததால் நாடு முழுவதும் கடுமையான ஊரடங்கு உத்தரவு நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.
மேலும் இராணுவமும் களமிறக்கப்பட்டிருந்தாலும், அங்கு தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. வன்முறையில் இதுவரை 130-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
வன்முறை
இந்த நிலையில் போராட்டத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வரும் நிலையில், ஊரடங்கை மீறி வன்முறையில் ஈடுபடுவோரைக் கண்டதும் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்ய காவல்துறைக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டில், பங்களாதேஷின் உயர் நீதிமன்றம் இட ஒதுக்கீட்டு முறை சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்திருந்த போதும், மேல் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அதை புதுப்பிக்க அரசாங்கம் முயற்சி எடுத்ததை தொடர்ந்து இந்த மாணவர் போராட்டம் வெடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |