கொடூரமாக தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை!விசாரணையில் சிக்கிய கடிதம்
பண்டாரவளை நகரில் உள்ள ஹோட்டலொன்றில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.
எடம்பிட்டியவை சேர்ந்த 40 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
களனி - கோணவலயை சேர்ந்த 50 வயதான நபரொருவர் நேற்று (23) ஹோட்டலுக்கு வருகை தந்துள்ளதுடன், இன்று குறித்த பெண்ணை ஹோட்டலுக்கு அழைத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் தப்பியோட்டம்
குறித்த நபர் அவசரமாக ஹோட்டலில் இருந்து வௌியேறியதால், அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் இருவர் அறையை சோதனையிட்ட போது குறித்த பெண் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதன்போது ஹோட்டலிலிருந்து தப்பிச்சென்ற சந்தேகநபரால் எழுதப்பட்ட கடிதமொன்றும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதற்கமைய, சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்துள்ளார்.