கட்டுநாயக்க விமான நிலையம் செல்வோருக்கு ஓர் அறிவிப்பு

Sri Lankan rupee Bandaranaike International Airport Nimal Siripala De Silva
By Fathima Mar 30, 2023 08:49 AM GMT

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அபராதத் தொகை அதிகரிப்பு

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த அபராதத் தொகையை ஒரு இலட்சம் ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் வாடகை வாகனங்களின் சாரதிகள், போக்குவரத்து சேவை வழங்குநர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தகைய நபர்களுக்கு இதற்கு முன்னர் 25000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

கட்டுநாயக்க விமான நிலையம் செல்வோருக்கு ஓர் அறிவிப்பு | Bandaranaike International Airport Katunayake