வாழைப்பழ விலையில் திடீர் மாற்றம்

Banana Sri Lanka Economy of Sri Lanka
By Fathima Apr 07, 2023 08:21 AM GMT
Fathima

Fathima

பண்டிகை காலம் என்பதால் நாரஹேன்பிட்டி பொருளாதார நிலையத்தில் விற்பனை செய்யப்படும் வாழைப்பழ வகைகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு கிலோ புளி வாழைப்பழத்தின் சில்லறை விலையானது 320 ரூபாவாக அதிகரித்துள்ள நிலையில் ஒரு கிலோ புளி வாழைப்பழத்தின் மொத்த விலை 270 ரூபாவாகும்.

இது தவிர ஒரு கிலோ சீனி வாழைப்பழத்தின் சில்லறை விலையும் 240 ரூபாவாக அதிகரித்துள்ளது.

வாழைப்பழ விலையில் திடீர் மாற்றம் | Banana Prices In Sri Lanka

விலை அதிகரிப்பு

ஆனால் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ புளி மற்றும் சீனி வாழைப்பழத்தின் மொத்த விலை 140 முதல் 150 ரூபா வரை பதிவாகியுள்ளது.

வாழைப்பழத்தின் கேள்வி அதிகரித்துள்ள நிலையில் பல கிராமங்களில் ஒரு கிலோ புளி மற்றும் சீனி வாழைப்பழத்தின் சில்லரை விலை 100 முதல் 150 ரூபா வரை உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.