மத்திய மாகாணத்திலிருந்து மாடுகளை கொண்டு செல்ல தடை
Sri Lanka
Central Province
By Fathima
மத்திய மாகாணத்தில் இருந்து பிற மாகாணங்களுக்கு மாடுகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
கால்நடைகளுக்குடையே பரவி வரும் தோல் கட்டி நோய் காரணமாக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக மத்திய மாகாணத்தில், பால் உற்பத்தி பாதிப்பு ஏற்படக்கூடும் என அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஆர்.எம்.கே.பி ராஜநாயக தெரிவித்துள்ளார்.