பாடசாலைகளில் நடத்தப்படும் விழாக்களை மட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தல்

Central Province Sri Lankan Schools
By Madheeha_Naz Jan 21, 2024 01:00 PM GMT
Madheeha_Naz

Madheeha_Naz

பாடசாலைகளில் விழாக்களை நடத்துவதை மட்டுப்படுத்துமாறு மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் சுற்றறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

மத்திய அசாங்கம் மற்றும் மாகாண சபையின் கீழுள்ள மத்திய மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளிலும் நடத்தப்படும் விழாக்களை குறித்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சில பாடசாலைகள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி பெற்றோரிடம் பணம் வசூலிப்பதாக வரும் முறைப்பாடுகளை கருத்தில் கொண்டு இந்த சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் விளக்கமளித்துள்ளார்.

கல்விப் பணிப்பாளரிடம் அனுமதி

இந்நிலையில், சுற்றறிக்கையின் பிரகாரம் முதலாம் தவணையில் மூன்று விழாக்களும் இரண்டாம் தவணைகளில் நான்கு விழாக்களும் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், கூடுதலாக ஏதேனும் விழா நடத்தினால் மாகாண கல்விப் பணிப்பாளரிடம் அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முதல் பருவத்தில் பிள்ளைகள் சேர்க்கை விழா, சுதந்திர விழா, இல்லங்களுக்கு இடையேயான தடகள விழாவும், இரண்டாம் மற்றும் மூன்றாம் பருவத்தில் கல்விச் சுற்றுலா, கலை விழா, வண்ண விழா, ஆண்டு பரிசளிப்பு விழா நடத்தவும் அனுமதி வழங்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இசை நிகழ்ச்சிகள், ஆசிரியர் தின விழாக்கள் உள்ளிட்ட பல்வேறு கொண்டாட்டங்களை நடத்தி பெற்றோர்களிடம் இருந்து அதிபர்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் வரம்பில்லாமல் பணம் வசூலிப்பதாக எழுந்த முறைப்பாட்டின் பேரில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.