கடற்றொழிலாளர்களுக்கு விதிக்கப்பட்டது தடை

Fishing Climate Change Weather
By Fathima May 22, 2024 10:07 PM GMT

அடுத்த சில நாட்களில் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பல நாள் கடற்றொழில் படகுகள் உட்பட அனைத்து கடற்றொழில் படகுகளும் கடற்றொழிலுக்கு செல்ல அனுமதிக்கப்படாது என கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பாக கரை திரும்புமாறு

தற்போது கடற்றொழிலில் ஈடுபட்டுள்ள பல நாள் கடற்றொழில் படகுகளை பாதுகாக்கப்பட்ட பகுதிகள் வழியாக கரை திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த மேலும் தெரிவித்துள்ளார்.