சோஹாரா புகாரியை நேரில் சென்று சந்தித்த மேயர் ராய் கெலி பால்தாசர்
கொழும்பு மாநகர சபை பட்ஜெட் வாக்கெடுப்பில் ஆளும் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு (NPP) ஆதரவாக வாக்களித்ததற்காக கட்சி உறுப்புரிமை இடைநீக்கம் செய்யப்பட்ட கொழும்பு நகர உறுப்பினர் சோஹாரா புகாரியை மேயர் ராய் கெலி பால்தாசர் சந்தித்துள்ளார்.
புகாரியின் வீட்டுக்கு தனது கட்சி உறுப்பினர்களுடன் சென்ற மேயர், அவரின் தற்போதைய நிலைமை தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டுள்ளார்.
தற்போதைய நிலைமை
சோஹாரா புகாரி நேற்று தனது சமூக வலைதளத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.

"எனது நலம் குறித்து விசாரிக்க வீட்டிற்கு வந்த மேயர் மற்றும் நகராட்சி உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்."
கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயற்பட்டார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சோஹாரா புகாரி கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.