பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை மாற்ற முடியாது: உற்பத்தியாளர்கள் சங்கம்

Sri Lanka Economic Crisis Sri Lanka Economy of Sri Lanka
By Fathima Jun 05, 2023 08:51 AM GMT
Fathima

Fathima

சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்ட போதிலும் வெதுப்பக உற்பத்திகளின் விலையில் மாற்றம் ஏற்படுத்த முடியாது என அகில இலங்கை வெதுப்பக உற்பத்தி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்

இன்றைய தினம் (05.06.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, நாடளாவிய ரீதியில் உள்ள வெதுப்பகங்களில் 25 சதவீதமானோரே சமையல் எரிவாயு மூலம் வெதுப்பக உற்பத்திகளை மேற்கொள்கின்றனர்.

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை மாற்ற முடியாது: உற்பத்தியாளர்கள் சங்கம் | Bakery Products

எரிவாயு விலைத்திருத்தம்

இதன்காரணமாக, வெதுப்பக உணவு உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கமுடியாது.

அதேநேரம், சமையல் எரிவாயு விலைத்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பங்களில் விலைத்திருத்தங்களை தமது சங்கம் மேற்கொள்விலை எனவும் அகில இலங்கை வெதுப்பக உற்பத்தி உரிமையாளர்கள் சங்கத்தின் தெரிவித்துள்ளார்.