சற்றுமுன் இடம்பெற்ற விபத்து - பலர் காயம்

By Mayuri Oct 20, 2023 09:04 AM GMT
Mayuri

Mayuri

பதுளை - மீகஹகிவுல, யோதஉல்பத பகுதியில் பஸ்ஸொன்று பள்ளமொன்றில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த 26 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 22 பயணிகள் மீகஹகிவுல வைத்தியசாலையிலும், 4 பயணிகள் பதுளை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.