32 பற்களுடன் பிறந்த பெண் குழந்தை

United States of America World Texas
By Shalini Balachandran Jul 21, 2024 09:53 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

அமெரிக்காவின் (America) டெக்சாஸ் (Texas) மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குழந்தை பிறக்கும் போதே 32 பற்களுடன் பிறந்ததாக  காணொளியொன்றை பகிர்ந்து ஆச்சரியமூட்டும் தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்த பெண் குழந்தை பிறக்கும் போது முழுமையாக 32 பற்கள் கொண்டிருந்ததாகவும் இது ஒரு அரிய நோய் என்றும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குழந்தையின் தாய் காணொளியை பகிர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

32 பற்களுடன் பிறக்கும் இந்த நோயால் குழந்தைக்கு கடுமையான பிரச்சினைகள் இல்லையெனவும் ஆனால் இளம் வயதிலேயே பற்கள் விழும் வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிறக்கும் குழந்தை

அத்தோடு ஒருவேளை பல் உடைந்தால் குழந்தை அதை விழுங்கும் வாய்ப்பு உள்ளதுடன் இது தவிர குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது தாய்க்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், பிறக்கும் போதே இப்படிப்பற்களுடன் பிறக்கும் குழந்தைகளின் பிரச்சனையை நேட்டல் டீஸ்டீஸீ (Natal Teeth) என தெரிவிக்கப்பட்டுள்ளது.

32 பற்களுடன் பிறந்தவர்கள் பெரியவர்களானதற்கான உதாரணங்கள் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதுடன் கர்ப்ப காலத்தில் சில ஹார்மோன் பிரச்சனைகளாலும் மற்றும் ஹார்மோன் உற்பத்தியில் ஏற்படும் வேறுபாடுகளாலும் இது நிகழ வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், புரதத்தின் அளவு சரியான அளவில் இருக்க வேண்டுமெனவும் சத்துள்ள உணவுகளை அதிகமாக உட்கொள்வது நல்லதல்ல எனவும் அத்தோடு சமநிலையை பராமரிக்க வேண்டும் எனவும் வைத்தியர்கள் கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW