ரவி கருணாநாயக்க தன்னை ஏமாற்றியதாக அசாத் சாலி வழங்கிய முறைப்பாடு!

Ravi Karunanayake Sri Lanka Politician Sri Lanka Police Investigation
By Fathima Jan 05, 2026 01:59 PM GMT
Fathima

Fathima

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றுள்ளார்.

அவருடைய காணி ஒன்றை முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தனதாக்கி கொண்டமை தொடர்பில் வழக்கு தாக்கல் செய்வதற்காக அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றுள்ளார்.

வழக்கு விசாரணை

அசாத் சாலி, காணி ஒன்றை வாங்க முற்பட்ட போது அதனை விற்பனை செய்தவர்களால் அந்த காணி திடீரென அதிகரிக்கப்பட்டதாகவும் இதன்போது 15 மில்லியன் ரூபாய் தனக்கு தருவதாக கூறி ரவி கருணாநாயக்க உதவியதாகவும் கூறியுள்ளார்.

ரவி கருணாநாயக்க தன்னை ஏமாற்றியதாக அசாத் சாலி வழங்கிய முறைப்பாடு! | Azath Salley Files Complaint Ravi Karunanayake

பின்னர் அசாத் சாலி, கைது செய்யப்பட்ட போது அவருக்கு சொந்தமான குறித்த காணியில் ரவி கருணாநாயக்க முறைகேடாக வசித்து வருவதாகவும் இந்த விடயம் தனது மனைவிக்கும் தெரியாது எனவும் கூறியுள்ளார்.