ஆயுர்வேத வைத்தியர்களுக்கும் மேலதிக சேவை கொடுப்பனவு

By Mayuri Aug 08, 2024 09:40 AM GMT
Mayuri

Mayuri

மேலதிக சேவை கொடுப்பனவை அரச ஆயுர்வேத வைத்தியர்களுக்கும் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 18 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆயுர்வேத மருத்துவர்கள், பல சந்தர்ப்பங்களில் இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.

கோரிக்கையை நிறைவேற்ற அனுமதி

எனவே, அந்த கோரிக்கையை நிறைவேற்ற அனுமதி அளித்தமைமைக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு விசேட நன்றியைத் தெரிவிக்க வேண்டும்.

ஆயுர்வேத வைத்தியர்களுக்கும் மேலதிக சேவை கொடுப்பனவு | Ayurvedic Physicians Extra Payment

மேலும் கடந்த ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் பாரம்பரிய வைத்தியர்களைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இது தொடர்பான 712 விண்ணப்பங்கள் இதுவரை பெறப்பட்டுள்ளன. இதனிடையே பாரம்பரிய வைத்தியர்களின் பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன.

ஆனால், அடுத்த சில வாரங்களில் அவர்களுக்கான பரீட்சை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் திட்டமிடப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW