சாய்ந்தமருது பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வு செயலமர்வு!
சாய்ந்தமருது பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களுக்கான நுகர்வோர் விழிப்புணர்வு செயலமர்வு இடம்பெற்றுள்ளது.
விழிப்புணர்வு செயலமர்வு
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அம்பாறை மாவட்ட செயலக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் விழிப்புணர்வு செயலமர்வு நடத்தப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன் தலைமையில் இன்று (20) சாய்ந்தமருது பொலிஸ் நிலைய கூட்ட மண்டபத்தில் இந்த செயலமர்வு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, நூகர்வோர் உரிமைகள்,பொறுப்புகள்,சட்டங்கள்,பாதுகாப்பு மற்றும் பொருட்கள் சேவைகளின் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விடயங்கள் மற்றும் தற்போதைய சந்தையில் பொருட்களின் அரசாங்க கட்டுப்பாட்டு விலை மற்றும் அதிகார சபையின் சட்ட திட்டங்கள் சம்பந்தமான விரிவுரை வழங்கப்பட்டுள்ளது.




