இலங்கைக்கு வரும் அவுஸ்திரேலிய பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் அவுஸ்திரேலிய பிரஜைகளுக்கு அந்நாட்டு அரசாங்கத்தினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் முதல் இந்த அறிவுறுத்தல்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு பயணங்களை மேற்கொள்ளும் அவுஸ்திரேலிய பிரஜைகள் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
அவ்வாறான பகுதிகளுக்கு பயணங்களை மேற்கொள்வதனை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்ளை சம்பவங்கள், பாலியல் துஷ்பிரயோகங்கள், கூடுதலான பணம் அளவீடு செய்தல் கடன் அட்டை மோசடி, போலி பொருட்கள் விற்பனை போன்ற பல்வேறு குற்ற செயல்கள் இடம் பெறுவதாகவும் இந்த விடயங்கள் தொடர்பில் அவுஸ்திரேலிய பிரஜைகள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |