அவுஸ்திரேலிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம்! இலங்கையர்களின் நிலை குறித்து தகவல்

Sri Lanka Sri Lankan Peoples Austria
By Fathima Dec 15, 2025 08:30 AM GMT
Fathima

Fathima

அவுஸ்திரேலியாவின் பொன்டாய் கடற்கரையில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இலங்கையர் எவரும் பாதிக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர இதனை தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவம்

அத்துடன் இலங்கையின் அதிகாரிகள் குறித்த சம்பவம் தொடர்பில் கண்காணித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம்! இலங்கையர்களின் நிலை குறித்து தகவல் | Australian Shooting Incident Situation Sri Lankans

இது தொடர்பில் ஊடகமொன்றுக்கு இன்று கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சிட்னியில் உள்ள பொன்டாய் கடற்கரையில் கூடியிருந்த மக்களை இலக்கு வைத்து 2 துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட 42 பேர் காயமடைந்துள்ளனர்.