ஆஸ்திரேலியாவின் ஹீரோ அகமது அல்-அஹ்மத்திற்கு குவியும் பாராட்டு!

Donald Trump Australia World
By Fathima Dec 15, 2025 04:53 AM GMT
Fathima

Fathima

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் முயற்சியை தடுத்து நிறுத்தி பல உயிர்களை காப்பாற்றிய அகமது அல்-அஹ்மத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ட்ரம்ப் கருத்து தெரிவிக்கையில், “துப்பாக்கி ஏந்தியவர்களில் ஒருவரை நேரடியாக எதிர்கொள்ளத் துணிந்து, அபூர்வமான துணிச்சலுடன் செயற்பட்டு பல உயிர்களைக் காப்பாற்றியவர். தற்போது அவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இப்படிப்பட்ட வீரச் செயலை மேற்கொண்ட இந்த மனிதருக்கு முழுமையான மரியாதை,” என குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கிச்சூட்டு சம்பவம்

இதனிடையே, அவுஸ்திரேலியாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் போது மிகுந்த சாதுரியத்துடனும் தைரியத்துடனும் செயற்பட்ட அகமது அல்-அஹ்மத்திற்கு இஸ்ரேலிய பிரதமரும் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் ஹீரோ அகமது அல்-அஹ்மத்திற்கு குவியும் பாராட்டு! | Australian Hero Ahmed Al Ahmad

ஆஸ்திரேலியாவின் சிட்னி மாகாணத்தில் உள்ள போண்டி கடற்கரையில் நேற்று இரண்டு நபர்கள் சேர்ந்து நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மொத்தம் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதன்போது அகமது அல்-அஹ்மத் என்ற பொதுமகன் துப்பாக்கிதாரியை மடக்கி பிடித்து அங்குள்ள மக்களை காப்பாற்றியுள்ளார்.

தனது உயிரை பணயம் வைத்து அவர் செய்த இந்த வீர செயலை பலரும் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

GalleryGalleryGallery