வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்த அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்

Jaffna Australia P. S. M. Charles
By Madheeha_Naz Mar 27, 2024 03:18 PM GMT

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பவுல் ஸ்டீபன் (Paul Stephens) வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பானது இன்று (27.03.2024) ஆளுநரின் யாழ்ப்பாணத்திலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

வேலையின்மை பிரச்சினை 

இதன்போது, அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் ஊடாக வடக்கில் முன்னெடுக்கப்பட்ட மற்றும் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்பாடுகள் தொடர்பில்  இலங்கைக்கான உயர்ஸ்தானிகர், ஆளுநருக்கு தெளிவுப்படுத்தியுள்ளார்.

அத்துடன் வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டதோடு, வடக்கு மாகாணத்தில் காணப்படும் வளங்களை அடையாளப்படுத்தி புலம்பெயர் உறவுகள் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவுஸ்திரேலிய வாழ் இலங்கை புலம்பெயர் உறவுகளுக்கு தெளிவுபடுத்துமாறும் உயர்ஸ்தானிகரிடம் ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், வடக்கு மாகாணத்தில் தொழிற்துறையை மேம்படுத்துவதனூடாக வேலையின்மை பிரச்சினை தீர்க்கப்படுவதுடன், பொருளாதார நிலையிலும் முன்னேற்றத்தை காண முடியும் எனவும் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

GalleryGalleryGallery