அவுஸ்திரேலியாவில் நீண்ட போராட்டத்தின் பின் இலங்கை குடும்பத்திற்கு கிடைத்த குடியுரிமை

Refugee Sri Lanka Refugees Australia Sri Lanka visa
By Vethu Sep 13, 2023 05:24 PM GMT
Vethu

Vethu

அவுஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிடத்தை கோரி 1,000 கிலோமீற்றர் நடைப்பயணத்தில் ஈடுபட்ட இலங்கை குடும்பத்திற்கு அந்நாட்டு அரசாங்கம் நிரந்தர குடியுரிமை வழங்கியுள்ளது.

அவர்கள் இலக்கை அடைய சில கிலோமீட்டர் தொலைவில் இருந்தபோதே அவர்களின் குடிவரவு வழக்கறிஞர் மூலம் அவர்களுக்கு இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையரான நீல் பார்ரா என்பவர் கடந்த ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதி விக்டோரியாவில் இருந்து நடைபயணத்தை ஆரம்பித்தார்.

தமிழ் -முஸ்லிம் ஆயுதக் குழுக்களின் முக்கிய நகர்வுகள் குறித்து பகிரங்க குற்றச்சாட்டு (Video)

தமிழ் -முஸ்லிம் ஆயுதக் குழுக்களின் முக்கிய நகர்வுகள் குறித்து பகிரங்க குற்றச்சாட்டு (Video)

அரசியல் தஞ்சம்

அவுஸ்திரேலியாவில் தற்போது அகதி விசாவில் உள்ளவர்களுக்கும் அரசியல் தஞ்சம் கோரி வருபவர்களுக்கும் நிரந்தரத் தீர்வைக் கட்டாயப்படுத்துவதே அவரது நடைபயணத்தின் நோக்கமாக இருந்தது.

அவுஸ்திரேலியாவில் நீண்ட போராட்டத்தின் பின் இலங்கை குடும்பத்திற்கு கிடைத்த குடியுரிமை | Australia Permanent Residency Visa 2023

12,500 க்கும் மேற்பட்ட அரசியல் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி 19,000 கையொப்பங்களுடன் ஒரு மனுவையும் நீல் பார்ரா கொண்டு வந்தார்.

அதற்கமைய, மேலும் அதனை சிட்னியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் ஒப்படைத்திருந்தார்.

நிரந்தர குடியுரிமை

2008ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற போரின் போது தப்பிச் சென்ற நீல் பார்ரா மற்றும் அவரது மனைவி மற்றும் அவர்களது 3 பிள்ளைகள், ஏறக்குறைய 9 வருடங்களாக விசா ஏதும் இன்றி அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வந்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் நீண்ட போராட்டத்தின் பின் இலங்கை குடும்பத்திற்கு கிடைத்த குடியுரிமை | Australia Permanent Residency Visa 2023

இந்த நிலையில் அவருக்கு அவுஸ்திரேலியாவில் நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கை தொடர்பில் அமெரிக்கா விடுத்துள்ள அழைப்பு

மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கை தொடர்பில் அமெரிக்கா விடுத்துள்ள அழைப்பு