ஓய்வு பெறும் ஆஸி அணி நட்சத்திரம்
ஆஸ்திரேலியாவின் சாம்பியன்ஸ் டிராபி வெளியேற்றத்திற்குப் பிறகு, அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் சர்வதேச (ODI) கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
"இது ஒரு அற்புதமான பயணம், நான் இதன் ஒவ்வொரு நொடியையும் ரசித்தேன்," என்று ஸ்மித் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கு வழங்கிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
"எனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல அற்புத தருணங்கள் மற்றும் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டேன்.
இரண்டு உலகக்கோப்பைகளை வென்றது மிகப்பெரிய சாதனையாகும்.
சிறந்த சக அணியினருடன் விளையாடியது
மேலும், இந்தப் பயணத்தில் இணைந்த பல சிறந்த சக அணியினருடன் விளையாடியது மறக்க முடியாத அனுபவம் என தெரிவித்துள்ளார்.
இப்போது ODI அணியில் புதிய வீரர்கள் முன்னேறுவதற்கான சரியான தருணம் என ஸ்மித் தெரிவித்துள்ளார்.
"2027 உலகக்கோப்பைக்கான தயார் இப்போதே தொடங்க வேண்டும், எனவே இது விடை கொடுக்க சரியான நேரம் எனக் கருதுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு..
டெஸ்ட் கிரிக்கெட் தமக்கு முன்னுரிமை எனவும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, குளிர்காலத்தில் மேற்கிந்திய தீவுகள் தொடரும், அதன் பிறகு இங்கிலாந்துடனான தொடரும் தமக்கு மிக முக்கியமானவை என தெரிவித்துள்ளார்.
அந்த அளவுக்கு இன்னும் சிறப்பாக விளையாட முடியும் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார். ஸ்மித், ஆஸ்திரேலியாவுக்காக 170 ODI போட்டிகளில் கலந்து கொண்டு, 43.28 சராசரியில் 5800 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
இதில் 12 சதங்கள் மற்றும் 35 அரைசதங்கள் உள்ளடங்குவதுடன் 28 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
மேலும், 2015 மற்றும் 2023 உலகக்கோப்பை வெற்றிகள் உட்பட ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்குத் பல முக்கிய பங்களிப்புகளை வழங்கியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |