காஸா மக்களுக்கு ஆதரவு தெரிவித்து ஓட்டமாவடியில் வெடித்த போராட்டம்
ஓட்டமாவடி - மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (04.07.2025) ஜும்ஆ தொழுகையின் பின்னர் ஒன்றுகூடிய இளைஞர்கள் பலஸ்தீன் காஸா மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும், இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கவனயீர்ப்பு பேரணி ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த மாதத்தில், இஸ்ரேலிய படைகள் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் அமெரிக்க/இஸ்ரேலிய ஆதரவு உணவு விநியோக அமைப்பான காஸா மனிதாபிமான அறக்கட்டளையிலிருந்து (GHF) உணவு உதவிகளை பெற வந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றன.
இனப்படுகொலை
பத்தொன்பது தனித்தனி சம்பவங்களில் இதுவரை 549 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 4,000 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
தொடக்கத்திலிருந்தே, இது, நடந்துகொண்டிருக்கும் இனப்படுகொலையின் ஒரு பகுதியாகும்.
இது, உணவு விநியோக இடங்களை கொலைக் களங்களாக மாற்றும் நோக்கத்துடன், உதவி தேடிவரும் மக்களின் மீது நேரடியாக சிறிய ரக துப்பாக்கிகள், டாங்கிக் குண்டுகள் மற்றும் மோட்டார் குண்டுகளை பாவித்து, வேண்டுமென்றே நடத்தப்பட்டு வருகின்ற தாக்குதல் கொள்கையின் விளைவாகும் என்பது தெளிவாகத் தெரிகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |