ஈரானில் ஹிஜாப் அணியாத பெண்கள் மீது தாக்குதல்

Iran
By Fathima Apr 02, 2023 08:48 PM GMT

ஈரானில் ஹிஜாப் அணியாமையினால் இரு பெண்கள் கடுமையாக தாக்கப்பட்ட காணொளியொன்று வெளியாகியுள்ளது.

ஈரானில் ஹிஜாப் அணியாத இரண்டு பெண்களை ஒருவர் தயிர் டப்பாவைக் கொண்டு தாக்கியுள்ளார். மேலும், இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈரானிய பெண்கள் இருவர் தலையை மறைக்காததால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களை தாக்கிய நபரும் பொது இடத்தில் கலவரத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

ஈரானில் ஹிஜாப் அணியாத பெண்கள் மீது தாக்குதல் | Attack On The Two Women Who Did Not Wear Hijab

மேலும் ஹிஜாப் அணிந்து வருவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று கடை உரிமையாளருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சமீபத்தில் 22 வயது குர்தீஷ் பெண் ஹிஜாப் அணியாத காரணத்தால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஹிஜாப்புக்கு எதிராக அந்நாட்டில் பெண்கள் தொடர்ந்து எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.