ஜனாதிபதியின் இல்லத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம்! பின்னணியில் செயற்பட்ட ஶ்ரீரங்கா
Ranil Wickremesinghe
Sri Lanka
SL Protest
Sri Lanka Government
By Fathima
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக இல்லத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் செயற்பட்ட சந்தேகநபராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஶ்ரீரங்கா பெயரிடப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் பிரத்தியேக இல்லம் மீது கடந்த ஆண்டு ஜூலை மாதம் 9ம் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் குற்ற விசாரணைப் பிரிவினர் ரங்காவை சந்தேகநபராக அடையாளப்படுத்தியுள்ளனர்.
இந்த தாக்குதல் மற்றும் தீ வைப்புச் சம்பவங்களினால் வீட்டுக்கு பாரியளவில் சேதம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2011ம் ஆண்டு வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவம் தொடர்பில் ரங்கா தற்பொழுது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகளை உங்களது கை தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள எம்முடன் இணையுங்கள் Joint Now |