அம்பாறையில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்: ஆறு பேர் கைது

Ampara Journalists In Sri Lanka Eastern Province Crime
By Laksi Jan 03, 2025 04:37 AM GMT
Laksi

Laksi

அம்பாறை (Ampara)- இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நைனாகாடு பகுதியில் ஊடகவியலாளரை தாக்கிய 6 சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்று (2) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விவசாயிகளிடமிருந்து கிடைத்த தகவலை அடுத்து சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெறும் பகுதிக்கு செய்தி சேகரிக்க சென்ற அச்சல உபேந்திர(வயது-50) என்ற ஊடகவியலாளர் மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்றில் தேசிய மக்கள் சக்தியின் ஒருங்கிணைப்பு அலுவலகம் திறந்து வைப்பு

அக்கரைப்பற்றில் தேசிய மக்கள் சக்தியின் ஒருங்கிணைப்பு அலுவலகம் திறந்து வைப்பு

முறைப்பாடு

அத்தோடு, தாக்குதலுக்கு உள்ளான ஊடகவியலாளரின் புகைப்படகருவி தொலைபேசி ட்ரோன் கமெரா ஆகியவை சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேக நபர்களால் அபகரிக்கப்பட்டுள்ளதாக இறக்காமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அம்பாறையில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்: ஆறு பேர் கைது | Attack On Journalist In Ampara 6 People Arrested

இந்த முறைப்பாட்டிற்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான குழுவினர் செயற்பட்டு ஊடகவியலாளர் வசம் இருந்து சந்தேக நபர்களினால் அபகரித்து செல்லப்பட்ட ட்ரோன் கமெரா புகைப்படகருவி மற்றும் தொலைபேசிகள் மீட்கப்பட்டன.

கல்முனை கடற்கரை பூங்காவிற்கு ஆதம்பாவா எம்.பி கள விஜயம்

கல்முனை கடற்கரை பூங்காவிற்கு ஆதம்பாவா எம்.பி கள விஜயம்

மேலதிக விசாரணை

அத்துடன் ஆறு சந்தேக நபர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் மணல் அகழ்வில் ஈடுபட்ட வாகனம் என்பன மீட்கப்பட்டுள்ளன.

அம்பாறையில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்: ஆறு பேர் கைது | Attack On Journalist In Ampara 6 People Arrested

இது தவிர தாக்குதலுக்குள்ளான குறித்த ஊடகவியலாளர் அம்பாறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை இறக்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அநுர அரசாங்கத்தின் நடவடிக்கையால் வியப்படைந்த சர்வதேச நாணய நிதியம்!

அநுர அரசாங்கத்தின் நடவடிக்கையால் வியப்படைந்த சர்வதேச நாணய நிதியம்!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGallery